
100 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கும் USD 432 மில்லியன் குறிப்பிடத்தக்க முதலீட்டில் செயற்;படுத்தப்பட்ட முதல் பாரிய அளவிலான தேசிய திட்டமாகக் கருதப்படும் சியபலாண்டுவ “ரிவிதானவி” சூரிய மினசக்தி திட்டத்தின் நிலத்தை ஆய்வு செய்வதற்கும் முன்னேற்றத்தைக் கண்டறிவதற்கும் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர். குமார ஜெயக்கொடி நேற்று (25) கள விஜயத்தை மேற்கொண்டார்.
மொனராகலை மாவட்டத்தின் சியம்பலாண்டுவ பிரதேச செயலகப் பிரிவின் கொட்டியாகல கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள கிட்டத்தட்ட 219 ஹெக்ரேயர் பரப்பளவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்தப் பாரிய திட்டம், ஆண்டுக்கு 110 மில்லியன் கிலோகிராம் வளிமண்டல காபன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு பங்களிப்பு செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இத் திட்டம் 12MWh உலர்மின்கல சக்தி சேமிப்பு அமைப்பு வசதியுடன் பொருத்தப்பட்டுள்ளதால், தேசிய மின்சார கட்டமைப்பின் நிலையான தன்மையைப் பராமரிப்பதற்கு உதவிபுரியுமென கருதப்படுகிறது.
மண் பரிசோதனை, நில அளவீடு மற்றும் சங்கிலி இணைப்பு வேலி போன்ற நிர்மாணப்; பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதை அமைச்சரால் அவதானிக்க முடிந்துள்ளது, மேலும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தேவையான தலையீடுகளுடன் விரைவில் தீர்க்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் அகலகட, நிலைபெறு தகு வலுசக்தி அதிகாரசபையின் தலைவர். பேராசிரியர் விஜேந்திர பண்டார மற்றும் பல சிரேஸ்ட அதிகாரிகள் குழுவும் இவ் விஜயத்தில் பங்கேற்றனர்.