அணு விபத்து ஏற்பட்டால் கதிர்வீச்சு அளவைக் கண்காணிப்பதற்கு முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்பை நிறுவுவதற்கு இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது சர்வதேச அணுசக்தி அமைப்பின் உதவியுடன் செயற்;படுத்தப்படுகிறது.
இந்த அமைப்புகள் நாடு முழுவதும் 05 வெவ்வேறு இடங்களில், முதன்மையாக கற்;பிட்டி, மன்னார், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை போன்ற கடற்படைத் தளங்களுக்கு அருகில் நிறுவப்பட்டுள்ளதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் சபையின் ஆய்வு மற்றும் அமுல்படுத்தல் பிரிவின் பணிப்பாளர் பிரகீத் கடடுன்ன தெரிவித்துள்ளார்.
அருகிலுள்ள நாடுகளில் இயற்கை அல்லது செயற்கை அணுமின் நிலைய விபத்துகள் மூலம் இலங்கைக்குள் நுழையக்கூடிய கதிர்வீச்சைக் கண்டறியும் திறனுடன் இந்த அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.