
சர்வதேச அணுசக்தி முகவர் (IAEA) நிறுவனத்தின் வள பங்களிப்புடன் இலங்கை காமா மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “மருத்துவ மற்றும் உணவுப் பொருட்களின் பெறுமதி கூட்டல் மற்றும் தர மேம்பாட்டிற்கான காமா கதிர்வீச்சு தொழில்நுட்பத்தின் பயன்பாடு” குறித்த தேசிய பயிற்சி பட்டறை இன்று (15) பியகமவில் உள்ள முதலீட்டு சபை கேட்போர் கூடத்தில் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடியின் பங்கேற்புடன் நடைபெற்றது.
“இவ் தேசிய பயிற்சி பட்டறை, மருத்துவம், விவசாயம் மற்றும் சுற்றாடல்; தொழிற்துறைகளில் பெறுமதி கூட்டல் மற்றும் தர மேம்பாட்டிற்காக காமா கதிர்வீச்சு தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதன் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை உற்பத்தியாளர்கள், தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் குறிப்பாக அத்தகைய தொழிற்துறைகளுடன் தொடர்புடைய ஏற்றுமதியாளர்களிடையே ஏற்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது! உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தையில் தரத்தை மேம்படுத்தவும் போட்டியை வலுப்படுத்தவும் காமா கதிர்வீச்சு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் நன்மை கணிசமானதாக இருக்கும். அணுசக்தி தொழில்நுட்பத்தை தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகளில் ஒருங்கிணைப்பதை விரைவுபடுத்த எங்கள் அரசாங்கம் விரும்புகிறது. இது தொடர்பாக இலங்கை அணுசக்தி சபையால் எடுக்கப்பட்ட முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது” என்று தொடக்க நிகழ்வின் போது அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கை காமா மையம் என்பது இலங்கை அணுசக்தி சபைக்கு உரித்தான ISO 13485 தரச்சான்றிதழ் பெற்ற பல்நோக்கு காமா கதிர்வீச்சு ஆய்வகமாகும், மேலும் இது ஜனவரி 2014 முதல் செயற்பட்டு வருகிறது.
சர்வதேச அணுசக்தி முகவர் (IAEA) நிறுவனத்தின் டாக்டர் மரியா ஹெலினா, இலங்கை அணுசக்தி அதிகாரசபையின்; தலைவர் டாக்டர் துஷார ரத்நாயக்க, இலங்கை அணுசக்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் திருமதி சம்பா திசாநாயக்க மற்றும் இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள், ஒழுங்குபடுத்தல் முகாமைகள் மற்றும் வணிக அமைப்புகளைச் சேர்ந்த பல நிர்வாக அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.