
ஜப்பானிய முதலீட்டாளர்கள் குழு ஒன்று இன்று (31) வலுசக்தி அமைச்சில் அமைச்சரை சந்தித்தது. இக் கூட்டத்தின் போது, மீள புதுப்பிக்கத்தக்க சக்தியில் முதலீட்டு வாய்ப்புகள், குறிப்பாக மின்சார பரிமாற்ற அமைப்பின் நவீனமயமாக்கல் மற்றும் அபிவிருத்தி குறித்து விவாதங்கள் நடைபெற்றன.
இலங்கையர்களாகிய நாங்கள் ஜப்பான் மீது மிகவும் நேர்மறையான பார்வையைக் கொண்டுள்ளோம், ஏனெனில் அது எங்கள் நீண்டகால நட்பு நாடுகளில் ஒன்றாகும். எங்கள் நாட்டின் அபிவிருத்தி மற்றும் உட்;கட்டமைப்பு மேம்பாட்டில் ஜப்பான் அளிக்கும் ஆதரவை நாங்கள் குறிப்பாகப் பாராட்டுகிறோம், மேலும் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி இலங்கையின் மின் உற்பத்தி மற்றும் மின்சார பரிமாற்றத் துறையில் முதலீடுகளை செய்வதற்கான வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் மிகவும் நன்றியுடையவர்களாக இருக்கிறோம் என்று அமைச்சர் கூறியுள்ளார்;. அந்த முதலீட்டாளர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். நாட்டில் அபிவிருத்தி திட்டங்களைச் செயற்;படுத்தும்போது அரச நிறுவனங்களிடமிருந்து தேவையான ஒப்புதல்களைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் சிக்கல்கள் குறித்து முதலீட்டாளர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர், மேலும் அதற்கு பதிலளிக்கும் விதமாக, அரசாங்கம் இந்தப் பிரச்சினைகளைக் கண்டறிந்து எதிர்காலத்தில் அவற்றை நிவர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது, ஜப்பானிய முதலீட்டாளர்கள் மீள புதுப்பிக்கத்தக்க சக்தித் தொழிற்துறையில் முதலீடு செய்வதற்கான தங்கள் வலுவான விருப்பத்தை அமைச்சரிடம் தெரிவித்தனர், மேலும் அமைச்சரால் வழங்கப்பட்ட தகவல்களைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் அந்தத் துறையில் முதலீடு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகவும் தெரிவித்தனர்.
ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிக செயலாளர் திரு. சுபாஷ் ரோஷன் கமகேவும் இந் நிகழ்வில் கலந்து கொண்டார்.