
கொலன்னாவை எண்ணெய் முனையத்திற்கு மேற்பார்வை விஜயம் மேற்கொண்ட வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி, நேற்று (01) காலை “தூய இலங்கை” தேசிய திட்டத்தின் ஆரம்ப விழாவில் பங்கேற்றார். வருகையின் போது கூடியிருந்த ஊழியர்களிடையே உரையாற்றிய அமைச்சர், தனது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.
“எரிசக்தி துறையின் வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. எரிசக்தி தொழிற்துறை நேரடி அரசாங்க உரிமை, ஒழுங்குபடுத்தல் மற்றும் அதிகாரத்தின் கீழ் இருக்க வேண்டும் என்று எங்கள் அரசாங்கம் நம்புகிறது. முன்னைய அரசாங்கம் எரிசக்தி துறையின் அரசாங்க உரிமையை மாற்ற முயற்சித்தபோது, நாங்கள் அதை எதிர்த்தது மட்டுமல்லாமல், அதை தோற்கடிப்பதிலும் வெற்றி பெற்றோம்,” என்று அவர் மேலும் கூறினார்.
“எரிசக்தி துறையின் வளர்ச்சிக்கான திட்டங்கள் நிச்சயமாக எங்களிடம் உள்ளன. நாங்கள் அவற்றை செயற்;படுத்தத் தொடங்கியுள்ளோம். மேலும், ஊழியர்களின் வேலை பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளுக்கு நாங்கள் அதிக கவனம் செலுத்துகிறோம். நிறுவனத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், இந்த அரசாங்கத் திட்டத்தை நீங்கள் ஆதரிப்பீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.”
“தூய இலங்கை தேசிய திட்டத்தின் பரந்த நோக்கங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். திருட்டு, வீண்விரயம் மற்றும் ஊழலை எதிர்ப்பது இந்த பரந்த நோக்கங்களின் முக்கிய பகுதியாகும். அதனால்தான் இன்று தொடங்கப்பட்ட தூய்மையான இலங்கை தேசிய திட்டம் தனித்துவமானது, மேலும் இன்று அதன் தொடக்க நாளாக குறிப்பாக குறிப்பிடத்தக்க நாளாகும்,” என்று அவர் மேலும் கூறினயுள்ளார்.
இலங்கை பெற்;றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் திரு. டி.ஜே.ஏ.எஸ். டி.எஸ். ராஜகருணா, முகாமைத்துவ பணிப்பாளர் திரு. மயூர நெத்திகுமாரகே மற்றும் பல சிரேஸ்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.