
புதிய அரசாங்கத்தின் எரிசக்தி கொள்கை மற்றும் திட்டத்திற்கு இணங்க, திருகோணமலையில் உள்ள எண்ணெய் தொட்டி வளாகத்திலிருந்து நாட்டிற்கு ஏராளமான அந்நிய செலாவணியை ஈட்ட அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இதற்காக, லங்கா ஐஓசி இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து செயற்படும். இந்த நோக்கத்திற்காக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்கனவே நிறுவப்பட்ட கூட்டு முயற்சியான டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் லிமிடெட் மூலம் இந்த முயற்சிகள் எதிர்காலத்தில் செயற்;படுத்தப்படும்.
“இந்த தாங்கிகள் பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் கட்டப்பட்டிருந்தாலும், அவை இன்னும் நல்ல நிலையில் உள்ளன. சிறிய அளவிலான சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது, கப்பல்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கான குழாய் பாதையை அமைப்பது மற்றும் துறைமுக அபிவிருத்திக்கான களஞ்சியமாக அதனை அபிவிருத்தி செய்தல் ஆகியவை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சுடன் இணைந்து மேற்கொள்ளப்படும், இதன் மூலம் நாடு அதன் நன்மைகளைப் பெறுவதை உறுதிசெய்யும்” என்று திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்திற்கு விஜயம் செய்தபோது வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார்.
உலகின் ஐந்தாவது பெரிய இயற்கை துறைமுகமாக அறியப்படும் திருகோணமலை துறைமுகத்திலிருந்து அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்கான திட்டத்தை வகுக்க இரு அமைச்சுக்களும்; இணைந்து செயற்;பட்டு வருவதாக இந்த விஜயத்தில் கலந்து கொண்ட துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து துணை அமைச்சர் ருவான் ஜனித கொடித்துவக்கு தெரிவித்தார். இலங்கையை கடல்சார் கேந்திர மையமாக மாற்றும் இந்த பணியின் ஒரு பகுதியாக, எண்ணெய் சந்தையில் நுழைந்து எண்ணெய் பண்ணை அபிவிருத்தி திட்டத்திற்கு ஏற்ப துறைமுக அபிவிருத்தி திட்டத்தை அடுத்த சில மாதங்களுக்குள் செயற்படுத்துவதற்கான தேசிய திட்டத்தை அரசாங்கம் முன்வைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவர்கள் திருகோணமலை துறைமுகம், எண்ணெய் தாங்கி வளாகத்தைச் சேர்ந்த இலங்கை பெற்;றோலியக் கூட்டுத்தாபனம், டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் லிமிடெட் மற்றும் லங்கா ஐஓசி ஆகியவற்றில் இடங்களைப் பார்வையிட்டனர். மேலே குறிப்பிடப்பட்ட அமைச்சர்களுடன், இலங்கை பெற்;றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் திரு. டி.ஜே.ஏ.எஸ். டி.எஸ். ராஜகருணா, இலங்கை பெற்;றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் டாக்டர். மயூர நெத்திகுமாரகே, துறைமுக அதிகாரசபையின் தலைவர் அட்மிரல் (ஓய்வு) திரு. சிரிமேவன் ரணசிங்க மற்றும் பிற சிரேஸ்டத அதிகாரிகளும் இவ் தள விஜயத்தில் பங்கேற்றனர்.