நேற்று (28) சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கான தள விஜயத்தின் போது, வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி, இலங்கை பெற்;றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஸ்ட அதிகாரிகளுடன் சப்புகஸ்கநi;த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கான நவீனமயமாக்கல் திட்டங்கள் மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படும் பிரதான பகுதிகள் குறித்து கலந்துரையாடினார்.
இதற்கிடையில், சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்களை அமைச்சர் ஆய்வு செய்தார், மேலும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் ஏனைய ஊழியர்களுடன் நட்புறவுடன் உரையாடினார், அவர்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களுக்கான பரிந்துரைகள் குறித்து கவனம் செலுத்தினார்.
1969 ஆம் ஆண்டு 165 ஏக்கர் பரப்பளவில் நிர்மாணிக்கப்பட்ட சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், நாட்டின் பெற்றோலியப் பொருட்கள்; தொடர்பான கேள்வியில்; 40மூ ஐ வழங்குகிறது, அதே போல் களனிதிஸ்ஸ மற்றும் சப்புகஸ்கந்தை போன்ற மின்சார உற்பத்தி நிலையங்களின் செயற்பாடுகளுக்கு உலை எண்ணெய் மற்றும் நாப்தாவையும் வழங்குகிறது.
இலங்கை பெற்;றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் திரு. டி.ஜே. ராஜகருணா, முகாமைத்துவ பணிப்பாhளர் டாக்டர் மயூர நெத்திகுமாரகே மற்றும் சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் சிரேஸ்ட அதிகாரிகளும்; இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.