
முனையத்தின் செயற்;பாடுகளை கண்காணிப்பதற்கான தள விஜயத்தின் போது, அரசாங்கத்தின் கீழ் இலாபம் ஈட்டும் அரசு நிறுவனங்களின் கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக்கொள்வதற்கான அரசாங்கத்தின் அணுகுமுறை, கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள இலங்கை பெற்;றோலியக் கூட்டுத்தாபனத்தின் விமான எரிபொருள் விநியோக முனையம் மூலம் நாட்டிற்குள் கணிசமான மற்றும் தொடர்ச்சியான அந்நியச் செலாவணி வரவை உறுதி செய்யும் என்று அமைச்சர் தனது கருததை தெரிவித்தார்.
முன்னைய அரசாங்கம் மேலும் இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு செயற்படுவதற்கு அனுமதி வழங்க திட்டமிட்டிருந்ததால், விமான எரிபொருள் விநியோகம் மூலம் நாட்டிற்கு கிடைக்கும் கணிசமான அளவு அந்நியச் செலாவணி இழப்பு ஏற்பட்டது. ஆனால், மக்களின் தீர்ப்பின் வரலாற்று வெற்றி அத்தகைய திட்டங்கள் யதார்த்தமாக மாறுவதைத் தடுத்தது என்று அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
நாட்டின் வருமானம் ஈட்டும் வளங்களை தனிப்பட்ட இலாபத்திற்காக பிற கட்சிகளுக்கு ஒப்படைக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இத்தகைய திட்டத்தை தோற்கடித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இந்தத் திட்டத்தை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும், தேவையான உட்;கட்டமைப்பு மற்றும் மூலோபாயங்களுடன், நாட்டிற்கு தொடர்ந்து அந்நியச் செலாவணியை உருவாக்குவதை உறுதி செய்யும் என்று அவர் மேலும் கூறினார்.
விமானங்களுக்கான எரிபொருள் விநியோக செயற்;பாட்டில் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மிக உயர்ந்த தரக் கட்டுப்பாட்டு முறைகள் பயன்படுத்தப்படுவதாகவும், எரிபொருள் சேமிப்பு திறனை சுமார் 13 மில்லியன் லீற்றராக விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அமைச்சர், அடுத்த 20 ஆண்டுகளில் பண்டாரநாயக்க விமான நிலையத்தின் நவீனமயமாக்கல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் எரிபொருள் குழாய் அமைப்பை மேம்படுத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலும் வலியுறுத்தினார். முத்துராஜவெலவிலிருந்து ஒரு சிறப்பு குழாய் அமைப்பு மூலம் இந்த முனையத்திற்கு எரிபொருளைக் கொண்டு வருவதற்கான திட்டம் செயற்;படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் திரு. டி.ஜே.ஏ.எஸ். டி.எஸ். ராஜகருணா, முகாமைத்துவ பணிப்பாளர் திரு. மயூர நெத்திகுமாரகே மற்றும் பிற சிரேஸ்ட அதிகாரிகளும் இவ் தள மேற்பார்வையில் பங்கேற்றனர்.