‘2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்திற்கான திருத்தங்கள்’ என்று தலைப்பிடப்பட்டு வலுசக்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை விஞ்ஞாபனத்தை கவனத்திலெடுத்து, அமைச்சரவை அமைச்சர்களால் வழங்கப்பட்ட ஒப்புதலின் படி, 2025 மே 16 ஆம் திகதி அரசு வர்த்தமானியில் ‘இலங்கை மின்சார (திருத்தப்பட்ட) சட்டம்’ வெளியிடப்பட்டுள்ளது என்பதை வலுசக்தி அமைச்சு இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறது.