
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலக சுறறாடல்; தின கொண்டாட்ட நிகழ்வில் ….
“சுற்றாடலைப் பாதுகாக்க, நமது அணுகுமுறைகளை மாற்றுவது மிகவும் பிரதானமாகும். மனித நடவடிக்கைகளால் சுற்றாடலில் ஏற்படும் தாக்கத்தை புறக்கணிக்க முடியாது. எனவே, சுற்றாடலுக்கு உகந்த முறையில் சிந்தித்து செயற்;படுவது அவசியமாகும்;. இந்த வழியில் மட்டுமே சுற்றாடல் தினத்தின் நோக்கங்களையும், சுற்றாடல்; பாதுகாப்பின் தேசிய மற்றும் உலகளாவிய நோக்கத்தையும் அடைவதற்கு நாம் நேரடியாக பங்களிக்க முடியும். அதனால்தான் உங்களைப் போன்ற இளம் மாணவர்கள் உங்கள் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் சுற்றாடல் தின நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும். நமது எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த சூழலைப் பெறுவது நமது பொறுப்பு என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று இன்று (05) காலை ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உலக சுற்றாடல்; தின கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்றபோது அமைச்சர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் கூறியதாவது……………
“நாம் சுறறாடலைப் பற்றி அறிந்திருக்க வேண்டும், அதற்கேற்ப செயற்பட வேண்டும். நம் குழந்தைகளுக்கு ஒரு சிறந்த உலகத்தை மரபுரிமையாகக் கொண்டு சுற்றாடலைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்;படுவோம். சுற்றாடலைப் பாதுகாக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய அனைவரும் நம் கைகளை இணைப்போம்,” என்று அவர் கூறினார்.
“சுத்தமான இலங்கை” செயலகத்தின் ஜனாதிபதியின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் மற்றும் பணிப்பாhளர் துலிப் சோமிரத்ன, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரியர் அட்மிரல் எச்.யு. தம்மிகா, இலங்கை சாரணர் சங்கத்தின் உதவித் தலைமை ஆணையர் ஸ்ரீ லக் டி சில்வா, துணைத் துணைவேந்தர் (கல்வி) கே.ஏ.எஸ். தம்மிகா, இலங்கை சாரணர் சங்கத்தின் தலைமை ஆணையர் (நிர்வாகம்) ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) ஆண்ட்ரூ விஜேசூரியா, லாஃப் ஹோல்டிங்ஸின் குழு முகாமைத்துவ பணிப்பாhளர் டாக்டர் ரவி எதிரிசிங்க, லாஃப்ஸ் ஈகோ ஸ்ரீ லிமிடெட்டின் தலைமை நிறைவேற்று அதிகாரி சாலிய திசாநாயக்க மற்றும் பல நிபுணர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.