• ஆனி 5, 2025
  • kannan
  • 0

ஜப்பானிய முதலீட்டாளர்கள் குழு சமீபத்தில் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடியை சந்தித்து, ஜப்பானின் மீள புதுப்பிக்கத்தக்க சக்தி தொழறிதுறையில் பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் செயற்படுத்தக்கூடிய பல திட்ட முன்மொழிவுகள் குறித்து விவாதித்துள்ளனர்.

அவசரகால சூழ்நிலைகளிலும் மின்சாரம் தேவைப்படும் மருத்துவமனைகள், பொருளாதார மற்றும் பாதுகாப்பு மையங்களுக்கு தடையற்ற மற்றும் நிலையான மின்சார விநியோகத்தை உறுதி செய்யும் ஜப்பானின் சூரியசக்தி தொழிற்துறையில் தற்போது பயன்படுத்தப்படும் சமீபத்திய தொழில்நுட்பங்கள் குறித்து அமைச்சரின் கவனம் ஈர்க்கப்பட்டது.

இதுபோன்ற சிறப்புத் திட்டம் தொடர்பான ஒரு முன்னோடித் திட்டம் நாட்டில் செயற்படுத்தப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்டது, மேலும், நாட்டின் மின்சார அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான நவீன தீர்வுகளுக்கான முன்மொழிவுகளும் விவாதிக்கப்பட்டன.

புதிய அரசாங்கத்தின் வெளிப்படையான மற்றும் திறந்த முதலீட்டுக் கொள்கைகள் ஜப்பானிய முதலீட்டாளர்களை இந்த நாட்டில் பல துறைகளில் முதலீடு செய்வதற்கு பெரிதும் ஊக்குவித்துள்ளதாகவும், புதிய முதலீட்டு வாய்ப்புகள், குறிப்பாக மின்சாரத் தொழிற்துறையில், அவர்களின் சிறப்பு கவனத்தை ஈர்த்துள்ளதாகவும் முதலீட்டாளர்கள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.