
“நமது நாடு அதிக மீள புதுப்பிக்கத்தக்க சக்திகான வளத்தைக்; கொண்டுள்ளது. மீள புதுப்பிக்கத்தக்க சக்தியில் உலகளாவிய கவனம் செலுத்தப்பட்டு, உலகம் மீள புதுப்பிக்கத்தக்க சக்தியை நோக்கி மாறிவரும் இந் நேரத்தில், இயற்கை நமது நாட்டிற்கு அளித்துள்ள சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்தை அதிகபட்சமாகப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.”
மன்னார் பகுதியில் முன்மொழியப்பட்ட மற்றும் தற்போது இயங்கும் காற்றாலை மின்சார நிலைய தளங்களை ஆய்வு செய்தபோது வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி, அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, குறிப்பாக மன்னார் பகுதியில் காற்றாலை மின்சார உற்பத்தி திறனை முழுமையாகப் பயன்படுத்துவதையும், முதலீடுகள் மற்றும் இந்த விடயத்தில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதையும் ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட இத் திட்டம் செயற்;படுத்தப்படும் என்று கூறினார்.
இந்த விஜயத்தின் போது, முன்மொழியப்பட்ட முள்ளிகுளம் 100 மெகாவாட் காற்றாலைப் பண்ணைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தையும், தற்போது CEB இன் கீழ் இயங்கும் தம்பவன்னி காற்றாலைப் பண்ணையையும் அமைச்சர் மேற்பார்வையிட்டார், மேலும் அதன் சிரேஸ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
அந்த வளாகத்தின் அருகிலுள்ள பகுதியில் விரைவில் நிர்மாணிக்கப்படவுள்ள 50 மெகாவாட் ஹேலிஸ் ஃபென்டன்ஸ் காற்றாலைப் பண்ணையின் இடத்தையும் அவர் மேற்பார்வையிட்டார், மேலும் புதிய அரசாங்கம் அலகு ஒன்றிற்கு குறைந்தபட்சம் USD 4.65 சதம் என்ற விகிதத்தில் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
மேலும், மன்னார் குடிமக்கள் குழுவின் கௌரவத் தலைவர் வணக்கத்திற்குரிய. பிதா. எஸ். மார்கஸ் மற்றும் அதன் உறுப்பினர்களுடன் அவர்களின் கோரிக்கைகள், பரிந்துரைகள் மற்றும் மன்னார் பிராந்தியத்தை அபிவிருத்தி செய்வதற்கான அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.