• ஆனி 17, 2025
  • kannan
  • 0

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை நாட்டில் எரிபொருள் எண்ணெய் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்று கூறி, குறிப்பாக சமூக ஊடக தளங்களில் பல போலி மற்றும் தவறான செய்திகள் பரப்பப்படுவது கவனிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு மாதங்களுக்கு போதுமான பெற்;றோலிய இருப்புக்களை இலங்கை பெற்;றோலியக் கூட்டுத்தாபனம் பெற்றுள்ளது, மேலும் எதிர்கால பயன்பாட்டிற்காக கட்டளைகள் பிறப்பிக்கப்பட்ட பெற்;றோலிய இருப்புக்கள் தடையின்றி வருவதை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே, இதுபோன்ற போலி மற்றும் தவறான செய்திகளால் பொதுமக்கள் தவறான தகவல்களைப் பெற வேண்டாம் என்று வலுசக்தி அமைச்சு கேட்டுக்கொள்கிறது.