“நாங்கள் பகலில் மட்டுமே சூரிய ஒளி அல்லது சூரிய சக்தியிலிருந்து சக்தியை பெறுகிறோம். இரவு நேரத்தில் தேவைப்படும்போது மட்டுமே பெற்;றோலியத்தைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்கிறோம். இந்த இரண்டு ஆதாரங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை அல்ல. மின்சார விநியோகத்திற்கான ஆதாரம் தேவையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
மேலும், ஆட்சிக்கு வந்ததிலிருந்து, டீசல் அல்லது பெற்;றோலியத்திலிருந்து மீள புதுப்பிக்கத்தக்க சக்தியின் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் சக்திவளத்தை உற்பத்தி செய்வதற்கான எந்தவொரு குறிக்கோளிலோ அல்லது நடைமுறையிலோ எங்கள் அரசாங்கம் ஒருபோதும் ஈடுபடவில்லை.
மீள புதுப்பிக்கத்தக்க சக்தியிள் பயன்பாட்டை நாங்கள் ஒருபோதும் குறைக்க மாட்டோம், பெற்;றோலியத்தைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய மாட்டோம்” என்று வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி இன்று (17) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ரவி கருணாநாயக்க எழுப்பிய வாய்மொழி கேள்விக்கு பதிலளித்தார்.