
தேசிய எரிசக்தி தினம் இன்று (26) பண்டாரவளை விசாகா பெண்கள் கல்லூரியில் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர். குமார ஜெயக்கொடியின் பங்கேற்புடன் கொண்டாடப்பட்டது.
உமா ஓயா திட்டம் தொடர்பான நீண்டகால பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அமைச்சரவை துணைக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக அமைச்சர் குமார ஜெயக்கொடி பண்டாரவளைப் பகுதிக்கு மேற்கொண்ட விஜயத்திற்கு இணங்க, இந்த ஆண்டு தேசிய எரிசக்தி தின கொண்டாட்டம் பண்டாரவளை விசாகா பெண்கள் கல்லூரியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார மற்றும் நிலைபெறு தகு வலுசக்தி அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் விஜேந்திர பண்டார மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
1882 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் திகதி, ஜெர்மன் கப்பல் SS Helios கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தபோது இலங்கையர்கள் முதன்முதலில் மின் விளக்கின் ஒளியைக் கண்ட நாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 ஆம் திகதியை “தேசிய எரிசக்தி தினம்” என்று அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.