• ஆடி 1, 2025
  • kannan
  • 0

இந்திய எரிசக்தித் துறையைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அடங்கிய குழு ஒன்று, வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர். குமார ஜெயக்கொடியை நேற்று (30) வலுசக்தி அமைச்சில் சந்தித்துள்ளது.

இலங்கையின் எரிசக்தித் துறையில் முதலீட்டுக்கான வாய்ப்புகளைத் தேடுவதும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்குமான புதிய பாதைகளை ஆராய்வதுமே இவ் சந்திப்பின் பிரதான நோக்கமாகும். மேலும், தற்போதுள்ள மற்றும் எதிர்கால முதலீட்டு வாய்ப்புகளை அங்கீகரிப்பது, இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும் புதிய துறைகளை அடையாளம் காண்பது, பசுமை எரிசக்தி, மாற்று எரிபொருள் வளங்கள்;, நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சுற்றாடலுக்கு சிநேகபூர்வமான திட்டங்கள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது, குறிப்பாக இலங்கையின் எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது போன்ற திட்டங்களும் முன்வைக்கப்பட்டன.
இந்தியாவின் ஊஐஐயின் முன்னாள் தலைவர், ஐவுஊ லிமிடெட்டின் தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர். மகேந்திர சஞ்சீவ் பூரி, லங்கா இந்தியன் ஒயில் கம்பனியின முகாமைத்துவ பணிப்பாளர். தீபக் தாஸ், ஹைகான் இந்தியா லிமிடெட்டின் தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர். கிறிஸ்டோ ஜார்ஜ் உள்ளடங்கலான எரிசக்தி மற்றும் பசுமை எரிசக்தித் துறையில் பல பிரதான தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பை இலங்கையின் எரிசக்தித் துறையில் முதலீடுகளை அதிகரிப்பதற்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க படியாகக் கருதலாம்.