• ஆவணி 1, 2025
  • kannan
  • 0

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் திரு. ஆண்ட்ரூ பேட்ரிக் மற்றும் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி ஆகியோருக்கு இடையே இன்று (01) காலை அமைச்சில் சந்திப்பொன்று நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான எரிசக்தித் தொழிற்துறையில் தொடர்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடல், நாட்டின் மின்சாரத் தொழிற்துறை தொடர்பான தகவல்கள், திட்டங்கள் மற்றும் எதிர்கால முயற்சிகள் குறித்தும் குறிப்பாக கவனம் செலுததப்பட்டுள்ளது.
காற்றாலை போன்ற மினசாரத்; தொழிற்துறையில் வளர்ந்து வரும் போக்குகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது, மேலும் தேவைக்கேற்ப சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனங்கள் மூலம் நாட்டிற்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு பிரித்தானிய உயர் ஸ்தானிகர் விருப்பம் தெரிவித்துள்ளார்;. மேலும், நாட்டின் மீள புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்ட நீர் மின்சார அமைப்பு குறித்தும் விவாதங்கள் கவனம் செலுத்தின, மேலும் நாட்டின் மிகப்பெரிய நீர் மின்சார நிலையமான விக்டோரியா மின் உற்பத்தி நிலையம், இங்கிலாந்தின் உதவித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டதை அமைச்சர் நன்றியுடன் நினைவுகூர்ந்தார். அசல் திட்டத்திற்கு ஏற்ப விக்டோரியா மின் நிலையத்தின் திறனை மேலும் மேம்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்;, மேலும் இந்த நோக்கத்திற்காக பிரித்தானிய அரசாங்கத்தின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த விஷயங்களை தனது அரசாங்கத்திடம் முன்வைப்பதாகவும், இது தொடர்பாக மேலும் நடவடிக்கைகளை எளிதாக்க அனைத்து சாத்தியமான உதவிகளையும் வழங்குவதாகவும் உயர் ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.