தேசிய மின்சக்தி கொள்கை தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைக்கோரல்
2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்கம் உடைய இலங்கை மின்சக்தி (திருத்தப்பட்ட) சட்டத்தின் 4 ஆம் பிரிவின் விதிமுறைகளுக்கமைவாக, தேசிய மின்சக்தி கொள்கையின் (National Electricity Policy) வரைவு தயார் செய்யப்பட்டுள்ளதுடன், அது தற்போது அமைச்சின் வலைத்தளத்தில் (www.energymin.gov.lk) பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆர்வமுள்ள தரப்பினரிடமிருந்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு இந்த அமைச்சு திட்டமிட்டுள்ளது. அதற்கமைய 2026.01.09 ஆம் திகதிக்கு முன்னர் உங்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைக் கீழுள்ளவாறு சமர்ப்பிக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
கருத்துகளை அனுப்பமுடியுமான முறைகள்
- மின்னஞ்சல்: neac@energymin.gov.lk
- கடிதம் மூலம் : செயலாளர், வலுசக்தி அமைச்சு, இல.437,காலி வீதி, கொழும்பு –
- தொலைநகல் இலக்கம்: 0112 574 752
- தொலைபேசி இலக்கம் : 0112 574 922 (நீடிப்பு இலக்கம் 509/510/403)
செயலாளர்
வலுசக்தி அமைச்சு
