2025.12.19 அன்று வலுசக்தி அமைச்சினால் வெளியிடப்பட்ட இலங்கை தேசிய மின்சாரக் கொள்கை (வரைவு) தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளும் ஆலோசனைகளும் அழைக்கப்பட்டன.
தேசிய மின்சாரக் கொள்கை (வரைவு) தொடர்பாக கருத்துகள் மற்றும் பார்வைகளை சமர்ப்பிக்கும் கால அவகாசம் 2026.01.14 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே குழுவிற்கு எழுத்து மூலமான கருத்துகளை சமர்ப்பித்துள்ள அனைத்து தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களும், குழுவுடன் கலந்துரையாடலை கோர விரும்பின், கீழே குறிப்பிடப்பட்ட முகவரிக்கு மேலதிக எழுத்து மூல கோரிக்கையொன்றை அனுப்பலாம்.
ஆலோசனைச் செயல்முறை நிறைவடைந்த பின்னர், தேசிய மின்சாரக் கொள்கையின் இறுதி வரைவு பொதுமக்களின் கருத்திற்காக வெளியிடப்படும்.
செயலாளர்
வலுசக்தி அமைச்சு
இல. 437, காலி வீதி, கொழும்பு 03.
கருத்துகளை அனுப்பமுடியுமான முறைகள்
- மின்னஞ்சல்: neac@energymin.gov.lk
- கடிதம் மூலம் : செயலாளர், வலுசக்தி அமைச்சு, இல.437,காலி வீதி, கொழும்பு –
- தொலைநகல் இலக்கம்: 0112 574 752
- தொலைபேசி இலக்கம் : 0112 574 922 (நீடிப்பு இலக்கம் 403)
