“தூய இலங்கை” தேசிய திட்டத்தின் தொடக்க விழாவில் வலுசக்தி அமைச்சும்; இணைந்தது. கொழும்பு 03 காலி வீதியில் அமைந்துள்ள வலுசக்தி அமைச்சில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடியின் செய்தி இடம்பெற்றது.

“வலுசக்தி அமைச்சராக, எனது இலாகாவிற்குள் உள்ள அனைத்து நிறுவனங்களுடனும், குறிப்பாக இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்;றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை நிலைபெறு தகு வலுசக்தி அதிகாரசபை, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், “தூ இலங்கை” திட்டத்தின் இலக்குகள் மற்றும் நோக்கங்களை அடைவதற்கு ஒத்துழைப்போம்.”

“நமது நாட்டின் பொருளாதார, சமூக, கலாச்சார, தார்மீக மற்றும் சுறறாடல் முன்னேற்றத்தை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்ட “தூய இலங்கை” திட்டத்தில் இணைப்பதற்கு இந்த நாட்டின் அனைத்து குடிமக்களையும் அழைப்பதற்கு விரும்புகிறேன்,” என்று அவர் கூறியிருந்தார்.

வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால, வலுசக்தி அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.