• ஆவணி 2, 2025
  • Uyaam Maalik
  • 0

மின்சார பரிமாற்ற அமைப்பு நவீனமயமாக்கல் திட்டம் துரிதப்படுத்தப்பட உள்ளது.

தேசிய மின்சார பரிமாற்றல் மற்றும் விநியோக வலையமைப்பு அபிவிருத்தி மற்றும் செயற்திறன் அபிவிருத்தி திட்டத்தின் (பொதி 02 மின்சார வலையமைப்பு துணை மின்சார நிலையம்) கீழ் பூர்த்திசெய்யப்பட்ட 02 புதிய துணை மின்சார நிலையங்களை ஆய்வு செய்யும் போது, ​​வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி, விநியோக செயற்;திறனை மேம்படுத்துதல், மின் தடைகளைக் குறைத்தல் மற்றும் மீள புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை மின்சாரக் கட்டமைப்புக்கு பெற்றுக்கொள்ளலை எளிதாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட மின்சார பரிமாற்றல் அமைப்பு நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்;. இதற்கிணங்க, இந்தத் திட்டத்தின் கீழ், இலங்கை மின்சார சபை 03 புதிய மின்சார பரிமாற்றல் துணை மின்சார நிலையங்களை உருவாக்கி வருகிறது, அவையாவன் பத்தரமுல்லை 132/33 kV (உள்நாட்டு துணை மின்சார நிலையம்), கிரிந்திவெல 132/33 kV (மின்சார வலையமைப்பு துணை மின்சார நிலையம்) மற்றும் கிரிந்திவெல 220/132 kV சுவிட்சிங் ஸ்டேஷன்;. அமைச்சர் தனது வருகையின் போது கிரிந்திவெலவில் அமைந்துள்ள அவ் துணை மின்சார நிலையங்களில் இரண்டை பார்வையிட்டுள்ளார்.

கிரிந்திவெல சுவிட்சிங் நிலையத்தின் நிறைவு மகாவலி மற்றும் களனி மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து மேற்கு மாகாணத்திற்கு மின்சார பரிமாற்றத்தை வலுப்படுத்தும், மேலும் இது தற்போதுள்ள ஒற்றை மின்சார பரிமாற்றல் பாதையை பல மின்சார பரிமாற்றல் பாதையுள் வலையமைப்பாக மாற்றும், இதன் மூலம் இவ் மின்சாரஅமைப்பின் நம்பகத்தன்மையை மேம்படுத்தி, மின்சார வலையமைபபில் செயலிழப்பு அபாயத்தைக் குறைக்கும்.

புதிய கிரிந்திவல சுவிட்சிங் நிலையம் 132 kV மின்சார பரிமாற்றல் வலையமைப்பின் திறனை 500 மெகாவாட்டாக அதிகரிக்கும், மேலும் இது விநியோக திறனை 63 மெகாவாட் அதிகரிக்கும், கிரிந்திவல, யக்கல, கடவத்த மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்யும். இது கைத்தொழிற்;துறை மற்றும் வீட்டு பயன்பாட்டிற்கான நம்பகமான விநியோகத்தையும் வழங்கும். மேம்படுத்தப்பட்ட வலையமைப்பு மேற்கு மாகாணத்தில் கூரையின் மேல் உள்ள சூரியசக்தி மின்சாரத்தையும், எதிர்காலத்தில் நாடு முழுவதும் உருவாக்கப்பட உள்ள பிற பாரிய அளவிலான எரிசக்தி ஆதாரங்களையும் தேசிய மின்சார வலையமைப்பில் வெற்றிகரமாக ஒருங்கிணைக்க உதவும். மேலும், குறைவான வயரிங் தேசிய மின்சார வலையமைப்பின் செயற்;திறனை அதிகரிக்கக்கூடும், குறைக்கப்பட்ட மின்சார பரிமாற்றல் தடைகள் மூலம் மின்சார இழப்புகளைக் குறைக்கும். கொஸ்கம, கொத்மலை, பாதுக்க, பன்னிபிட்டிய, ரத்மலானை, சீதாவக்கை, துல்கிரிய, வியாங்கொடை, நாவுல, பொல்பிட்டிய மற்றும் உக்குவெல துணை நிலையங்களும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்படும்.

இவ் நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார், மேலும் திட்டத்தை செயற்;படுத்தும் போது தனது ஆதரவை அதிகாரிகளுக்கு உறுதியளித்தார். திட்ட பணிப்பாளர் ஏ.எல்.இசட். ஹ{சைன், திட்ட முகாமையாளர்; (பொதி 02) பொறியியலாளர் எஸ்.சி.ஏ. சுபாசிங்க, மற்றும் பிற பொதி திட்டத்தின் முகாமையார்களான ஏ.டி.கே. பராக்கிரமசிங்க, பொறியியலாளர் ஜி.எச்.பி.பி. கணேகொட, சிவில் பொறியியலாளர் எல்.என்.எஸ். சில்வா மற்றும் பல அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.