• ஆவணி 21, 2025
  • Uyaam Maalik
  • 0

தேசிய மின்சார மைப்பின் நிலையான தன்மையை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்ட பிரதான குறுகிய கால மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் குறித்து வலுசக்தி அமைச்சர் கௌரவ.பொறியியலாளர். குமார ஜயகொடி பாராளுமன்றத்தில் விளக்கம்

பாராளுமன்ற உறுப்பினர் திரு. கவிந்த ஜயவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், தேசிய மின் வலையமைப்பின் நிலைத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில் பல குறுகிய கால மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜயகொடி இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறுகிய கால நடவடிக்கைகள்

  • திடீர் மின் அமைப்பு மாற்றங்களின் போது கூரை அமைப்பு சூரிய மின் (Rooftop Solar PV) அமைப்புகளின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக இன்வெர்டர் தொழில்நுட்ப அளவுருக்கள் புதுப்பித்தல்.

  • மின் வலையமைப்பு நிலைத்தன்மை தொடர்பான சவால்களை கருத்தில் கொண்டு, கூரை அமைப்பு சூரிய மின்சாரத்தை முழுமையாக வலையமைப்பில் செலுத்துவதற்குப் பதிலாக, இடத்திலேயே உற்பத்தி–நுகர்வு (On-site / On-premises consumption) ஊக்குவிக்கும் தொழில்நுட்ப மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தல்.

  • இயன்றவரை நீர்மின் மற்றும் அனல் மின் நிலையங்களை synchronous condenser முறையில் இயக்குதல்.

  • ஞாயிற்றுக்கிழமைகள் போன்ற குறைந்த மின் தேவை உள்ள நாட்களில், அதிக சூரிய ஒளி காரணமாக மின்வலையமைப்பு நிலையற்றதாக மாறும் சூழ்நிலையில், மின் கட்டுப்பாட்டு மையத்தின் வழிகாட்டுதலின் கீழ் சூரிய மற்றும் காற்றாலை மின் நிலையங்களின் மின் விநியோகத்தை கட்டுப்படுத்துதல்.

  • விநியோக வலையமைப்புடன் இணைக்கப்பட்டு, மின் கட்டுப்பாட்டு மையத்தின் நேரடி கட்டுப்பாட்டிற்கு உட்படாத embedded generators-களிடம் தற்காலிகமாக மின் உற்பத்தியை நிறுத்துமாறு கோருதல்.

  • தேசிய மின் வலையமைப்பு நிலைத்தன்மையை ஆதரிக்கும் வகையில் Battery Energy Storage Systems (BESS) ஒருங்கிணைப்பதற்கான நேர அடிப்படையிலான கட்டண முறை (Time-Based Tariff) அமைச்சரவை அனுமதியுடன் அமல்படுத்தல்.

  • எதிர்காலத்தில் தேசிய மின் வலையமைப்புடன் இணைக்கப்படவுள்ள அனைத்து சூரிய மற்றும் காற்றாலை மின் நிலையங்களையும் மின் கட்டுப்பாட்டு மையத்தின் கீழ் கட்டுப்படுத்த தேவையான சட்ட மற்றும் தொழில்நுட்ப ஏற்பாடுகளை மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் மூலம் உறுதி செய்தல்.

  • Spinning Reserve, Under Frequency Load Shedding (UFLS) போன்ற தொழில்நுட்ப அளவுருக்களை ஆய்வு செய்து புதுப்பித்தல்.

  • லக்விஜய மின் நிலையத்தை பாதுகாப்பாக நிறுத்துவதற்கான தொழில்நுட்ப நடைமுறைகளை அமல்படுத்தல்.

நீண்டகால நடவடிக்கைகள்

  • Pump Storage Power Plant அமைப்பதற்காக இரண்டு முக்கிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அதில் மஹா ஓயா மிகச் சிறந்த இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு விரிவான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • 2026 மற்றும் 2027 ஆண்டுகளுக்குள் 100 MW மற்றும் 160 MW திறன் கொண்ட பெரிய அளவிலான உலர்மின்கல மின் நிலையங்களை தேசிய மின் வலையமைப்புடன் இணைக்கும் திட்டம்.

  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கணிப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான Renewable Energy Control Unit அமைப்பதற்கான டெண்டர் ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

  • எதிர்காலத்தில் STATCOM, synchronous condenser போன்ற மின்வலையமைப்பு நிலைத்தன்மை சாதனங்களை ஒருங்கிணைக்கும் திட்டம்.

  • அதிக அளவிலான மீள புதுப்பிக்கத்தக்க சக்தி ஒருங்கிணைப்பின் போது வலையமைப்பு நிலைத்தன்மையை உறுதி செய்ய inertia கொண்ட நெகிழ்வான மின் நிலையங்களை இணைக்கும் ஏற்பாடுகள்.

  • தொலைநிலை கண்காணிப்பு மற்றும் அவசர துண்டிப்பு வசதிகளை கொண்ட கூடுதல் smart meter செயல்பாடுகளை அறிமுகப்படுத்தல்.

  • சூரிய மற்றும் காற்றாலை போன்ற மரபுசாரா புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிலையங்களை நேரடி கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக, உற்பத்தியாளர்களின் இன்வெர்டர்கள் அல்லது சிம் கார்டு பொருத்தப்பட்ட மோடம்கள் மூலம் விநியோக கட்டுப்பாட்டு மையத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது