தேசிய மின்சக்திக் கொள்கை வரைவு தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைக் கோருதல்.
2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டம் (2025 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்டபடி) சட்டத்தின் 4 ஆம் பிரிவின் விதிகளுக்கு இணங்க, தேசிய மின்சாரக் கொள்கையின் வரைவு உருவாக்கும் பணியைக் குழு பூர்த்தி செய்துள்ளது. அத்துடன், குறித்த சட்டத்தின் 4(4) ஆம் பிரிவின் நோக்கங்களுக்காக, வலுசக்தி அமைச்சின் இணையத்தளத்தில் (www.energymin.gov.lk) இவ்வரைவுக் கொள்கை மூன்று மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள், பங்குதாரர்கள் மற்றும் ஆர்வமுள்ள தரப்பினர், மேற்கூறிய வரைவுக் கொள்கை தொடர்பாக தங்களின் எழுத்துப்பூர்வமான கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை, அவை தொடர்புடைய வரைவுக் கொள்கையின் சம்பந்தப்பட்ட பிரிவைத் தெளிவாகக் குறிப்பிடுகின்ற வகையில், சமர்ப்பிக்குமாறு வலுசக்தி அமைச்சு அன்புடன் அழைக்கிறது.
இத்தகைய அனைத்துக் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள முறையின் படி, 2026.02.19 அன்று, மதியம் 12:00 மணிக்கு அல்லது அதற்கு முன்பாகக் கிடைக்கப்பெற வேண்டும்.
கருத்துகளை அனுப்பமுடியுமான முறைகள் :
- மின்னஞ்சல் : neac@energymin.gov.lk
- கடிதம் மூலம் : செயலாளர், வலுசக்தி அமைச்சு, இல.437,காலி வீதி, கொழும்பு –
- தொலைநகல் மூலம் : 0112 574 880
செயலாளர்
வலுசக்தி அமைச்சு
Click here to download the policy: English
