• மார்கழி 9, 2024
  • kannan
  • 0

இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் திருமதி ஜூலி ஜே. சுங், இன்று (09) காலை வலுசக்தி அமைச்சர் திரு. குமார ஜெயக்கொடியைச் சந்தித்தார். புதிய வலுசக்தி அமைச்சரை வாழ்த்துவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையே எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிப்பதற்கும் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இலங்கையின் எரிசக்தித் துறையின் வளர்ச்சி தொடர்பாக, தேவையான தொழில்நுட்ப மற்றும் பிற உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், பெரும்பான்மையான மக்களிடமிருந்து வலுவான ஆணையைப் பெற்றுள்ள புதிய அரசாங்கம், இலங்கை மக்களின் சிறந்த நலன்களை நிறைவேற்றும் என்று அவர்கள் மிகவும் எதிர்பார்ப்பதாகவும், இந்த விடயத்தில் அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து தொடர்ந்து ஆதரவு கிடைக்கும் என்றும் அமெரிக்கத் தூதர் தெரிவித்துள்ளார்.
எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் திரு. குமார ஜெயக்கொடி, புதிய அரசாங்கத்தின் எரிசக்தி கொள்கை மற்றும் எரிசக்தி தொலைநோக்கு பார்வையை வரிவாக எடுத்துரைத்துடன், அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவிற்கான தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினார், குறிப்பாக மீள புதுப்பிக்கத்தக்க சக்தி தொழிற்துறைக்கு, அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்ட வலுவான நட்பு மற்றும் ஆதரவிற்கு தனது மனமாhந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

கொழும்பு 07, எர்னஸ்ட் சில்வா மாவத்தையில் உள்ள வலுசக்தி அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், அமெரிக்க தூதருடன், பொருளாதார வளர்ச்சிக்கான USAID திட்ட அபிவிருத்தி நிபுணர் (எரிசக்தி) திருமதி ரோசன்னே குரூஸ் மொரேஸ், வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.ரி.எம். உதயங்க ஹேமபால, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் திரு. டி.ஏ. ராஜகருணா, இலங்கை பெற்;றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் டாக்டர் மயூர நெத்திகுமாரகே மற்றும் மின் துறை சீர்திருத்தச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்; பொறியாளர் திரு. புபுது நிரோஷன் ஆகியோரும் பங்கேற்றனர்.