
“பிராந்தியத்தில் அதிக எரிசக்தி செலவுகளைக் கொண்ட நாடாக நாங்கள் இருக்கிறோம். புதிய அரசாங்கம் அந்த சூழ்நிலையை மாற்றி, நியாயமான மற்றும் மலிவு விலையில் எரிசக்தி வழங்கப்படுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது நாட்டின் வளர்ச்சிக்கு செய்யப்பட வேண்டும். குறிப்பாக, மீள புதுப்பிக்கத்தக்க சக்தியில் நாங்கள் அதிக எதிர்பார்ப்புகளை வைத்திருக்கிறோம். எரிசக்தி உற்பத்தியில் முதலீடு செய்வதற்கு தனியார் துறைக்கு ஏராளமான வாய்ப்புகளை நாங்கள் வழங்குகிறோம். அரசாங்கத்திற்கும் முதலீட்டாளர்களுக்கும் பயனளிக்கும் ஒரு வெற்றி-வெற்றி அணுகுமுறையைப் பின்பற்ற நாங்கள் பணியாற்றி வருகிறோம். முதலீட்டாளர்களின் மதிப்புகள் மற்றும் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொண்ட அரசாங்கமாகச் செயற்;பட்டு, அவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கும், நாட்டின் எரிசக்தி இலக்குகளை அடைவதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்,” என்று அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை நிலைபெறு தகு வலுசக்தி அதிகாரசபையின் கீழ் செயற்;படுத்தப்படும் நடுத்தர மற்றும் பாரிய அளவிலான மீள புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க தொடர்புடைய முதலீட்டாளர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடலின் போது இன்று (26) வலுசக்தி அமைச்சில்; இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இந்தக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
இந்தச் சந்திப்பின் போது, அத் திட்டங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவற்றின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றம் மற்றும் பல்வேறு தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து மீள புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் விவாதிக்கப்பட்டன.
இந்த மீள புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 500 மெகாவாட் திறனுக்கும் அதிகமான திறனை தேசிய மின் கட்டமைப்பில் ஒருங்கிணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன என்பது தெரியவநதுள்ளது.
இந்த நிகழ்வில், எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்கவும், தேவையான கொள்கை முடிவுகளை உடனடியாக எடுக்கவும் சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களுடன் ஒத்துழைக்குமாறு அமைச்சர் அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.