
கடந்த ஜனவரி மாதம் இலங்கை மின்சார சபையை தனியார்மயமாக்குவதற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டதற்காக இடைநீக்கம் செய்யப்பட்ட 62 ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர். வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடியின் சிறப்பு உத்தரவின் பேரில், அவர்களின் சலுகைகள் மீட்டெடுக்கப்பட்டன. ஒழுக்காற்று இடமாற்றங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த ஊழியர்கள் இன்று (24) இலங்கை மின்சார சபை தலைமையகத்தில் அமைச்சரை சந்தித்தனர்.
இலங்கை மின்சார சபை தலைமை அலுவலகத்தில் மேற்பர்வை சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, அமைச்சர் ஊழியர்கள் குழுவைச் சந்தித்தார், கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி, இலங்கை மின்சார சபை ஊழியர்களை நிறுவனத்தின் பிரதான சொத்தாகக் கருதுவதாகவும், நிறுவனத்தைப் பாதுகாக்கப் பிரச்சாரம் செய்த ஊழியர்களின் சார்பாகச் செயற்படுவதில் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார். இலங்கை மின்சார சபையை பாதுகாப்பதற்கு ஊழியர்கள் போராடினார்கள் என்பதை அவர் நன்கு புரிந்துகொள்கிறார் என்றும் குறிப்பிட்டார். மேலும், நாட்டின் சொத்துக்களை விருப்பப்படி விற்பனை செய்யும்; முன்;னைய அரசாங்கத்தின் திட்டத்தை தோற்கடிப்பது இந்த தேசத்தின் மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும், தேசிய மக்கள் சக்தியின் கீழ் நியமிக்கப்பட்ட புதிய அரசாங்கம் நாட்டின் தேசிய வளங்களைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிறுவனத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அனைவரும் கூட்டாகவும் ஒன்றாகவும் பணியாற்ற வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு. ரஞ்சன் ஜெயலால், முன்னைய அரசாங்கம் இலங்கை மின்சார சபையை பிரித்து விற்பனை செய்வதற்கான சட்டங்களை இயற்ற முடிந்தாலும், இந்த நாட்டில் வாழும் மக்கள், CEB இல் உள்ளவர்களுடன் சேர்ந்து, அந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதன் மூலம் அத்தகைய திட்டத்தை தோற்கடித்ததாகக் கூறினார். இந்த வெற்றி நாட்டின் தொழிற்சங்க இயக்கத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாகும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். அப்போதைய அரசாங்கமும் அப்போதைய அமைச்சரும் தன்னிச்சையாக ஒரு சட்டப் போராட்டத்தை நசுக்கி அறுபத்துரண்டு (62) CEB ஊழியர்களின் சேவைகளை இடைநிறுத்தச் செய்த போதிலும், இன்று தலையிட்டு அவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்ததற்காக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் உட்பட அனைத்து மின்சார தொழிற்சங்கங்களுக்கும் ஒரு வெற்றிகரமான தருணம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில், அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு, மீண்டும் CEB சேவையில் சேர்க்கப்பட்ட ஊழியர்கள், தங்களை மீண்டும் பணியில் அமர்த்தி, இடைநிறுத்தப்பட்ட சலுகைகளை மீட்டெடுத்ததற்காக புதிய அரசாங்கம், அமைச்சர் மற்றும் ஊநுடீ நிர்வாக அதிகாரிக்கு நன்றி தெரிவித்தனர்.
ஊழியர்களைச் சந்தித்ததன் பின்னர், கௌரவ அமைச்சர், CEB யின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர்; பொறியியலாளர் டபிள்யூ. எதிரிசூரியா மற்றும் அங்குள்ள பிற மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.