தேசிய மின்சக்திக் கொள்கை வரைவு தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைக் கோருதல்.
2024ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட) சட்டத்தின் பிரிவு 4 இன் விதிகளின்படி, முதற்கட்ட பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் ஆலோசனைகளைத் தொடர்ந்து, தேசிய மின்சாரக் கொள்கையின் இறுதி வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் ஆலோசனைக்காக இந்த வரைவு தற்போது அமைச்சகத்தின் இணையத்தளத்தில் (www.energymin.gov.lk) பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இந்த வரைவு குறித்து ஆர்வமுள்ள அனைத்து தரப்பினரிடமிருந்தும் பொதுமக்களின் கருத்துகளையும் பரிந்துரைகளையும் வலுசக்தி அமைச்சகம் வரவேற்கிறது.
கருத்துகளை அனுப்பமுடியுமான முறைகள் :
- மின்னஞ்சல்: neac@energymin.gov.lk
- கடிதம் மூலம் : செயலாளர், வலுசக்தி அமைச்சு, இல.437,காலி வீதி, கொழும்பு – 03.
செயலாளர்
வலுசக்தி அமைச்சு
Click here to download the policy: English
