தேசிய மின்சார வலையமைப்பின் நிலையான தன்மையை உறுதி செய்வதற்கு நுரைச்சோலை லக்விஜய மின் நிலையத்தை மேம்படுத்த வலுசக்தி அமைச்சர் பொறியியராளார். குமார ஜெயகொடி தலையீடு
நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்சார நிலையம் நாட்டின் மின்சார விநியோகத்தின் நிலையானதன்மையை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், நாடு முழுவதும் மின் தடை ஏற்படும் சூழ்நிலையில், மின்சார நிலையத்தின் condenser cooling system மற்றும் boiler feed water supply system ஆகியவற்றுக்கான துணை மின்சார விநியோகம் செயலிழப்பது ஒரு பிரதான தொழில்நுட்ப பலவீனமாக காணப்படுகிறது.
இந்த நிலைமை காரணமாக, மின் நிலையம் நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை செயலிழந்து நிற்க வேண்டிய சூழல் உருவாகுவதுடன், குறிப்பிடத்தக்க நிதி இழப்புகளும் ஏற்படுகின்றன.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி அவர்களின் பணிப்புரையின் பேரில் நியமிக்கப்பட்ட குழு, முக்கிய அமைப்புகளுக்காக இடையறாத மாற்று துணை மின்சார விநியோக அமைப்பை குறுகிய காலத்திற்குள் அமுல்படுத்துவது பொருத்தமான தீர்வாக இருக்கும் என பரிந்துரை செய்துள்ளது.
அதன்படி, condenser cooling system மற்றும் boiler feed water system ஆகியவற்றிற்கான துணை மின்சார விநியோகத்தை இலங்கை மின்சார சபையின் நிதியை பயன்படுத்தி செயல்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சர் முன்வைத்த முன்மொழிவு அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2025 ஆகஸ்ட் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது, தேசிய மின்சார வலையமைப்பின் நிலையானதன்மையை உறுதி செய்ய மேற்கொள்ள வேண்டிய அவசியமான நடவடிக்கையாக இந்த விடயம் அமைச்சர் மூலம் விளக்கப்பட்டது.
